வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பிற்பகல் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளார்.
எரிபொருள் விலையினை அதிகரித்தது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நேற்றிரவு தெரிவித்த நிலையில் இந்த செய்தியாளர் மாநாடு பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
