மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
57 வயதான தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்கேளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்படி பிரதேசத்தில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 23 வயது மகள், 29 வயது மகன் என 4 பேர் மண்சரிவில் புதையுண்டு காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில், 23 வயதுடைய யுவதியின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
