Our Feeds


Saturday, June 5, 2021

www.shortnews.lk

இலங்கை கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது - புது வருட கொத்தணியில் மட்டும் ஒரு லட்சம் பேர்

 



இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இலங்கையில் மேலும் 2,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 201,534 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,851 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,132 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,656 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, புதுவருட கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் நேற்றைய தினத்துடன் ஓரு லட்சத்தை தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »