எரிவாயு நிறுவனங்களை நடத்துவதற்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை குறைந்தபட்சம் ரூ 400 ஆக உயர்த்த வேண்டும் என்று எரிவாயு விலையை ஆராய நியமிக்கப்பட்ட குழுவில் முன்மொழியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழு நேற்று (14) கூடியதுடன், டொலரின் விலையேற்றம் மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலையில் பாரிய அதிகரிப்பு காரணமாக எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
