கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 100 MM மழை வீழ்ச்சி வரை பதிவாகும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
