Our Feeds


Sunday, June 13, 2021

www.shortnews.lk

MP க்களுக்கான சொகுசு கார்களை SJBயின் MPக்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம் - சஜித் அதிரடி அறிவிப்பு.

 



பொது மக்களின் வரியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 399 அதி சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்த விடயம் நாட்டில் பேசுப்பொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற இந்த மட்டுப்படுத்தப்பட்ட நிதியத்தை அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் வாழ்வை செழிப்பாக்குவதற்கு மக்களுக்குரிய வளத்தை பயன்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலாக அவ்வாறான வளங்களை நாட்டின் மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்கும் முதலீடு செய்தல் வேண்டும் என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »