(கல்குடா நிருபர்)
கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று (22) செவ்வாய்க்கிழமை வரை 729 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று வரை 690 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளன.
ஏனையவற்றில் 15 உடல்கள் இந்து, கிறிஸ்தவ, சிங்கள மக்களுடையவைகளாகும். ஏனைய இரண்டு உடல்கள். வெளிநாட்டவர்களுடையவை என பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.