Our Feeds


Wednesday, June 23, 2021

www.shortnews.lk

கொரோனாவினால் அதிகமானோர் வீடுகளில் மரணிக்க காரணம் என்ன? PHI சங்கம் விளக்கம்

 



(எம்.மனோசித்ரா)


கொவிட் -19 தொற்றுக்குள்ளானோரில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம் , தொற்று அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே இருப்பதாகும்.

இதேபோன்று தொற்று அறிகுறிகள் தீவிரமடைந்தால் அதன்போது தொற்றாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையும் வீடுகளில் உயிரிழப்புக்கள் பதிவாகும் வீதம் அதிகரிக்க காரணமாகும்.

கொவிட் -19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களிடம் சொந்த வாகனம் இல்லாதபட்சத்தில் வேறு வாகனங்களில் செல்வதிலும் சிக்கல் காணப்படுகிறது.

அத்தோடு 1990 அம்புலன்ஸ் சேவைகளும் தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளமையில் இதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே சாதாரண தொற்று அறிகுறிகள் தென்படும்போதே மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »