Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

பொது சுகாதார பிரிவினருக்கு 7,500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் - தொழிற்சங்கக் குழு அறிவிப்பு

 



மருத்துவத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதால் ஏற்படும் அநீதியை தவிர்ப்பதற்காக ஏனைய பொது சுகாதார பிரிவினருக்கும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்கக் குழு தீர்மானித்துள்ளது.


அதன்படி, சுகாதார பிரிவினருக்கு 7,500 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார சேவைகள் தொழிற்சங்கக் குழு குறிப்பிட்டுள்ளது.

நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »