Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

பிரதமராகிறாரா நாமல் ராஜபக்ஷ? மறுக்கிறார் கெஹலிய ரம்புக்வெல்ல.

 



இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தயாராகவுள்ளதாக வெளிவரும் செய்திகளை நிராகரித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, அந்தத் தகவல்கள் வெறும் "அரசியல் வாசகங்கள் "என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (8) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இது போன்ற தகவல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென தெரிவித்த அமைச்சர், பரப்பப்படும் கதைகளைப் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவார் என்ற கதைகளும் பரவலாம் என்றார்.

மகேஸ்வரி விஜயனந்தன்



நாடுமுழுவதும் பரவும் இவ்வாறான வதந்திகள் உறுதிப்படுத்தப்பட்டு
அங்கீகரிக்கப்படாவிட்டால் அதனை தீவிரமாக எடுத்துக்கொள்ளக்
கூடாதென்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »