”யார் என்ன சொன்னாலும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்பார் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகுவதை, தற்போதுள்ள எதிர்க்கட்சிக்கு தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், இரவு வேளையில், ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 15 பேர் ஆதரவளிக்க உள்ளனர் எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸதான் என, யோசனையை நிறைவேற்றியமைக்கான காரணம் என்ன? என வினவினார்.
