கடல் உணவுகளை உட்கொள்வதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது என தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (நாரா) அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்ஜன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
தீபற்றிய எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயண பதார்த்தங்கள் மற்றும் ஏனைய பதார்த்தங்களினால் கடல் உணவுகளை உட்கொள்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்பினர், பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாரா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையின் பிரகாரம், கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
