வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பயணக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நடத்திச் செல்வது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் ஒன்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிறுவனமொனறில் கிளையில் 15 ஊழியர்களுடன் சேவையை முன்னெடுக்க முடியும் என அந்த வழிகாட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவையாக காணப்படுகின்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
இந்த கோரிக்கை குறித்து பொலிஸ் மாஅதிபர், சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் வினவியுள்ளார்.
இவ்வாறு பொலிஸ் மாஅதிபரினால் வினவப்பட்டமைக்கு அமைய, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. (trueceylon)
