தானும் தனது சகோதரரும் அடுத்த மாதம் விண்வெளிக்கு செல்லவுள்ளதாக அமேஸான் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜெப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
அமேஸானுக்குச் சொந்தமான விண்வெளி நிறுவனமான புளூ ஓரிஜின் நிறுவனம், மனிதர்களை ஏற்றிச் செல்லும் தனது முதல் விண் ஓடத்தை அடுத்த மாதம் 20 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
நியூ ஷெபர்ட் எனும் இந்த விண்வெளி ஓடத்தில் தானும் தனது சகோதரர் மார்க் பெஸோஸம் பயணிக்கவுள்ளதாக இன்ஸ்டாகிராமில் ஜெப் பெஸோஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த விண்வெளிப் பயணத்தில் பெசோஸ் சகோதர்களுடன் இணைந்துகொள்ள விரும்புபவர்களுக்காக ஆசனமொன்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு புளூ ஓரிஜின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுவரை இந்த ஆசனத்துக்கான ஏலத் தொகை 28 இலட்சம் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி இந்த ஏலம் முடிவடையவுள்ளது.
