ஈராக் நாட்டின் முதல் கறுப்பு பூஞ்சை மரணத்தை பதிவு செய்துள்ளதாக ஈராக்கிய சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர்.
நாட்டின் தி கார் மாகாணத்தில் ஒரு நோயாளிக்கு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன, மேலும் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளன.
கறுப்பு பூஞ்சை (Mucormycosis) என்பது மண், தாவரங்கள், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பங்கஸூ ஆகும். இது மனிதர்களுக்கு தொற்றுவது மிக அரிதான நிகழ்வாகும்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இந்த கறுப்பு பூஞ்சை தொற்றுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கண்களை மோசமாக பாதிப்படைய வைப்பதுடன், கண் பார்வையை இல்லாமலாக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் கறுப்பு பூஞ்சை பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
