(எம்.மனோசித்ரா)
விசேட அதிரடிப்படையினரால் சூரியவெவ பிரதேசத்தில் சுமார் 3000 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளுடன் செவனகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் எம்பிலிபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேபோன்று கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது 129 கிலோ கேரள கஞ்சாவுடன் 37 வயதுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


