Our Feeds


Tuesday, June 1, 2021

www.shortnews.lk

போலி கடிதங்களுடன் நகருக்குள் வந்தால் தண்டனை என்ன?

 



போலியான அழைப்பு கடிதத்தை பயன்படுத்தி, கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குள் எவரேனும் பிரவேசிப்பாராயின், தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், ஐந்து வருட சிறைத் தண்டனையை விதிக்க சட்டத்தில் சரத்துக்கள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.


அதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபருக்கு, 50,000 ரூபா வரை அபராதம் அறவிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, எதிர்வரும் நாட்களில் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் அவர் குறிப்பிடுகின்றார்.

போலியான அழைப்பு கடிதத்தை காண்பித்து, நேற்றைய தினம் (31) பெருமளவிலானோர் கொழும்பு நகருக்குள் பிரவேசித்திருந்த நிலையிலேயே, பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைக் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »