மொரடுவை மேயர் சமன் லால் பெர்ணான்டோவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மொரடுவை மேலதிக நீதவானால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீராக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்து மொரடுவை மேயரின் சட்டத்தரணியால் குறித்த பிணை மனு கடந்த தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் போது சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மொரடுவை மேயர் சமன் லால் பெர்ணான்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
