(எம்.மனோசித்ரா)
அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அன்றி, முழு அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தது அமைச்சர் உதய கம்மன்பில அல்ல. நிதி அமைச்சினாலேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி அமைச்சருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது அரசாங்கத்துக்குள் பாரிய சதியொன்று முன்னெடுக்கப்படுகிறது. தேர்தலின் போது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்ட பங்காளி கட்சிகளை அரசாங்கத்திலிருந்து அகற்றுவதற்கான சூழ்ச்சிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்துக்கு வலு சேர்த்த கட்சிகளின் தலைவர்களை அரசாங்கத்திலிருந்தும் அமைச்சரவையிலிருந்தும் வெளியேற்றுவதற்கான இந்த செயற்பாடுகள் தொடருமாயின் எதிர்காலத்தில் இதே நிலைமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஏற்படக் கூடும் என்றார்.
