Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

அரசாங்கத்தின் எதிரிகள், அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளனர் − அமைச்சர் வெளியிட்ட கருத்து

 



அரசாங்கத்தின் எதிரி, அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.


கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தை பாதுகாக்க தான் நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசாங்கத்திற்குள்ளே உள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால், அரசாங்கத்தின் எதிரிகள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளார்கள் என அவர் கூறுகின்றார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கான தீர்மானம், திடீரென எடுக்கவில்லை எனவும், 4 மாதங்களாக ஆராய்ந்தே இந்த தீர்மானத்தை எட்டியதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »