Our Feeds


Tuesday, June 15, 2021

www.shortnews.lk

மு.கா MPக்கள் சஜித்தின் SJB கட்சி உறுப்பினர்கள் அல்ல - ரவுப் ஹக்கீம் அதிரடி

 



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அல்ல என அக்கட்சியின் தலைவரான கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்திற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என அவர் குறிப்பிட்டார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளிப்பது என்றே பிரேரணைக்கு ஒப்புதல் வழங்கினோம் என ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவதுடன் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


சண்டே டைம்ஸ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »