அதிக மழையுடனான காலநிலை காரணமாக தப்போவ மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலுள்ள தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும், குருணாகல் தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்தது.
எனவே, குறித்த நீர்த்தேக்கங்களை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
