Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞன்! - காரணம் வௌியானது!

 



மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் 4 ஐஸ் போதைப் பொருள் பெக்கெட்டுக்களை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பில் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூட்டில் அடைத்து வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்த சம்பவம் நேற்று (03) அதிகாலையில் இடம்பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணையும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பெக்கெட்டுக்களை கொண்ட ஐஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் நெஞ்சுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »