Our Feeds


Saturday, June 5, 2021

www.shortnews.lk

பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவார​ணம் வழங்கவும் - பிரதமர் மஹிந்த உத்தரவு

 



சீரற்ற வானியாலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார்.


அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவுக்கு அறிவுறுத்திய பிரதமர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக உடனடியாக செயற்படுத்துமாறு பணித்தார்.


அதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகலவுக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பில் அலரிமாளிகையில் நேற்று (04) நடைபெற்ற அவசர சந்திப்பில், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »