Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

நாடு திறக்கப்பட்ட பின் எப்படி நடந்து கொள்ள வேண்டும் - புதிய சுகாதார வழிகாட்டி

 



நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரான காலத்தில், மக்கள் செயற்படுகின்ற விதம் குறித்த புதிய சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.


இந்த புதிய சுகாதார வழிகாட்டி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் தாக்கத்தினால் காணப்படுகின்ற அதிவுயர் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு மக்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறின்றி, நாட்டை முடக்குவதில் எந்தவித பயனும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார வழிகாட்டியை பின்பற்ற வேண்டும் எனவும் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிடுகின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »