Our Feeds


Monday, June 14, 2021

www.shortnews.lk

பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்படுமா? - அமைச்சரின் பதில்.

 



பயணக் கட்டுப்பாடு இன்னும் சில காலத்திற்கு நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.


விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
“பயணத் தடையின் காரணமாக கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனினும்,  மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (TM)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »