பால்மா விலைகளை அதிகரிக்குமாறு பால் மாக்களை இறக்குமதிச் செய்யும் இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண உறுதிப்படுத்தினார்.
400 கிராம் அடங்கிய பால்மா பக்கெற்றின் விலையை 135 ரூபாயாக அதிகரிக்குமாறே, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால்மா உள்ளிட்ட இறக்குமதிச் செய்யப்படும் பல பொருள்களின் விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமாதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அக்கோரிக்கைளுக்கு எவ்விதமான பதிலும் இதுவரையிலும் வழங்கப்படவி்ல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள்களின் விலைகள் அண்மையில் அதிகரிக்கப்பட்டன. அதனுடன், எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி, அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்ததாக பால் மா விலைகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
