Our Feeds


Saturday, June 5, 2021

www.shortnews.lk

இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் - எதிர்க்கட்சி MP கபீர் ஹாஷிம் எச்சரிக்கை.

 



உணவு களங்சியப்படுத்தலைப் பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இரசாயன உர இறக்குமதியை முறையற்ற விதத்தில் நிறுத்தியுள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசீம், இதனால் இன்னும் சில மாதங்களில் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றார்.


கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர், உரத்தை நிறுத்தி உணவு களஞ்சியப்படுத்தலை இந்த அரசாங்கம் காட்டிக்​கொடுத்துவிட்டது என்றார்.

“உணவு மாத்திரமல்ல இதுவரை எரிபொருள் களஞ்சியப்படுத்தலை எரிபொருள் கூட்டுதாபனமே முகாமைத்துவம் செய்து வந்தது. ஆனால், இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து எரிபொருள் களுங்சியப்படுத்தலிலும் நெருக்கடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

சுகாதார பாதுகாப்பும் இல்லாமல் போயுள்ளது. மறுபுறம் நிதி முகாமைத்துவமும் சீரழிந்து இறுதியில் பங்களாதேஷிடம் கடன் வாங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில், இந்த அரசாங்கம் பதவி விலகுவதே சிறந்தது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »