பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதினால் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நடிகை பியூமி ஹண்சமாலி மீண்டும் பேஸ்புக் லைவ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் இதற்கு முன் நான் பேசியது இல்லை. இதுவே முதன்முறை என்றார். மேலும் அமைச்சரோ அல்லது அவரது மகனுடனோ எனக்கு எவ்வித தனிப்பட்ட தொடர்பும் இல்லை.
“நான் அவருடன் இதற்கு முன்பு பேசியதில்லை. என்னிடம் இரண்டு தொலைபேசி எண்கள் உள்ளன, நான் அவருடன் பேசியிருந்தால் என் தொலைபேசி விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்” என்று அவர் கூறினார்.
எனது வழக்கறிஞர் கூறியதைக் கேட்டே அவர் அமைச்சருக்கு போன் செய்ததாக கூறினார். “எங்களிடம் எந்த ஆடைகளும் இல்லை. எனவே, நான் அமைச்சருக்கு போன் செய்தேன், நான் அழுதேன், ”என்று அவர் கூறினார். (trueceylon)
