Our Feeds


Thursday, June 10, 2021

www.shortnews.lk

PHOTOS : கொரோனா தொற்றாளருக்கு கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை

 



மரமொன்றில் ஏறும் போது, தவறி வீழ்ந்த கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.


கண்டி தேசிய வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சுதந்த உடுகெதர உள்ளிட்ட குழுவினர் இந்த சத்திர சிகிச்சையை நடத்தியுள்ளனர்.

60 வயதான நபர் ஒருவர், ஏணியின் உதவியுடன் பலாப் பழமொன்றை பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நிலையில், பலாப்பழம் அவரது தலையில் வீழ்ந்மையினால், அவர் மரத்திலிருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

குறித்த நபரின் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர், கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு நடத்தப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலும், அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நபருக்கு சரியான தருணத்தில் சத்திர சிகிச்சை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்தினால், சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சுதந்த உடுகெதர உள்ளிட்ட குழுவினர் அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த நபருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தமையினால், இரத்தத்தில் காணப்படும் ஒக்சிஜனின் அளவு 80 வீதத்தால் குறைவடைந்த நிலையில், பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. (Mawbima)





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »