மருதானை பொலிஸ் நிலையத்தில் இன்று (16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டின் ஊடாக தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிசாலையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் ஒழுக்கு காரணமாக இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
