Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

30ம் திகதிக்கு பின்னரும் லொக்டவுன் தொடருமா? - சுகாதார அமைச்சர் பதில்

 



எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னரும் நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இம்முறை நாடு முடக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் முன்னணி நாடுகள் பலவும் நாட்டை முடக்கிவிட்டு முன்னேறிச் செல்வது கடினமென்றும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்கிவிட்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு குறித்து நாளை(26) அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தலைமையில் நாளை கூடவுள்ள கொரோனா ஒழிப்பு செயலணி குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »