Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

600க்கும் மேற்பட்ட போலி 500 ரூபா நோட்டுக்களுடன் வெல்லம்பிட்டியை சேர்ந்தவர் உட்பட மூவர் கைது!

 



(எம்.மனோசித்ரா)


சீதுவ பொலிஸ் பிரிவில் லியனகேமுல்ல மற்றும் வீரகுல பொலிஸ் பிரிவில் அங்கன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 602 போலியான 500 ரூபா நோட்டுக்களுடன் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலி நோட்டுக்கள் அச்சிடல் தொடர்பில் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சீதுவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குறித்த நபர்களிடமிருந்து 500 ரூபா நோட்டுக்கள் 60 கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது போலி நோட்டுக்களை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட மடிக்கணனி, கையடக்க தொலைபேசிகள் 3 மற்றும் மோட்டார் சைக்கிள் , 542 போலி நோட்டுக்கள் என்பவற்றுடன் மேலுமொரு ஒருவரும் கைது செய்யப்பட்டு குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, வேயங்கொட மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 43 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற விசாரணைப் பிரிவினரால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »