(ஹஸ்பர் ஏ ஹலீம்)
உலக சுகாதார நிறுவனத்தினாலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாலும் அடக்கம் செய்ய முடியும் என பரிந்துரைகள் செய்யப்பட்டபோதும், மக்களால் பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்பட்டபோதும் அதற்கு முரணாக நூற்றுக்கணக்கான உடல்கள் கட்டாயத்தில் தகனம் செய்யப்பட்டன.
சர்வதேச நாடுகள், ராஜதந்திரிகள் என பல்வேறு உயர் மட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் கொரோனா உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்த இடம் சுங்கான் குழி குளத்தின் நீரேந்து பிரதேசமாகவும் குளத்துக்கு மிக அண்மித்ததாகவும் நிலக்கீழ் நீர் மிக குறுகிய ஆழத்தில் காணப்படுவதாலும் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுக்கு நிச்சயமாக இப்பிரதேசம் உட்படப் போவதில்லை. அப்போது முடியாது என்றால் இப்போது எப்படி முடியும்? நாடகமா அரங்கேற்றப்படுகிறது?
குளத்து நீர் நேரடியாக பாதிக்கப்படும் என தெரிந்து கொண்டும் இந்த இடத்துக்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்களினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களத்தினதும் சிபாரிசுகள் எப்படி கிடைக்கப்பெற முடியும்? என்பதில் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய சூழ்ச்சிகள் ஏதும் இருக்கலாமோ என பாரிய சந்தேகங்கள் எழுகின்றன.
எவ்வாறாயினும் தெரிவு செய்யப்பட்ட இந்த இடத்தை கொரோனா உடல்களை அடக்குவதற்கு சிபாரிசு செய்ய முடியும் என்றால் வழமையாக நல்லடக்கம் செய்யப்படும் பொது மையவாடிகளை ஏன் சிபாரிசு செய்ய முடியாது ? என கேட்கிறேன் என்றும் அவ்வூடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
