Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

இராஜின் கன்னத்தில் அறைந்தாரா யோஷித்த? - நடந்தது என்ன? இராஜின் ராஜினாமா ஏன்?

 



கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே இராஜ் வீரரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததாக வெளியாகியுள்ள தகவலை யோஷித்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC)பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பாடகர் இராஜ் வீரரத்ன அந்த பதவியை நேற்று (25) இராஜினாமா செய்திருந்தார்.

தனது இராஜினாமா தொடர்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பிய அவர், தனக்கு தனிப்பட்ட வேலைகள் உள்ளமை காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்தில் அறைந்தமையே அவரின் இராஜினாமாவுக்கு காரணம் என்று தகவல் பரவியது.

இது தொடர்பில் டெய்லி மீரருக்கு  கருத்து வெளியிட்ட  யோஷித்த ராஜபக்ஷ இராஜ் வீரரத்னவுக்கு தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார்.

அத்துடன்,  அவரை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்வொன்றில் சந்தித்தாக கூறிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்ன, பதவி விலகியமைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »