(எம்.எப்.எம்.பஸீர்)
கடவத்தை – எல்தெனிய, ஜனதா மாவத்தை பகுதியிலுள்ள மாடி வீடு ஒன்றில் நேற்று (28) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். 57 மற்றும் 53 வயதான இருவரே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்று (28) அதிகாலை 4.20 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பரவல் ஏற்பட முன்னர், இரவு வேளையில் குறித்த தம்பதி, கீழ்மாடியில் வசிக்கும் தமது மகளை சந்தித்து ஒரு பையை வழங்கியுள்ளதாகவும், சந்தோஷமாக வாழுமாறு அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடவத்தை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸாரும் களனி குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
