Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

BREAKING: சிலாபத்தில் 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்ளுக்கு திருட்டுத்தனமாக பைசர் தடுப்பூசி போட்டதாக சர்சை

 



சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.


மையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை வழங்கியதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோருக்கு நேற்று தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் நேற்று ஒரு வைத்தியரின் குழந்தைகளுக்கும் பைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப சுகாதார சேவைகள் பிரிவின் பெண் ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் குழு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார துறையைச் சேர்ந்த இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியர் ஒருவரும், குடுபம்நல சுகாதார உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 18 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »