Our Feeds


Thursday, August 26, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: கொரோனா ஆபத்தான நோய் அல்ல, சாதாரண காய்ச்சல் தான் - ஆளும் கட்சி MP, SB திஸாநாயக சர்சை பேச்சு

 



கொரோனா என்பது ஆபத்தான நோய் அல்லவெனவும் அது சாதாரண காய்ச்சலே என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.


இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களில் 81 சதவீதமானவர்கள் எவ்விதமான சிரமங்களும் இன்றி பூரண குணமடைவதாகவும், 14 சதவீதமானவர்கள் மட்டுமே காய்ச்சல் இருமல் போன்றவற்றால் சிறிது சிரமத்திற்கு உள்ளாகி பின்னர் குணமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் கொரோனா மரணமானது இன்னும் 1.9 வீதமாகவே காணப்படுவதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »