பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொஹமட் நியாஸ் நவ்பர் என்ற “பொட்ட நவ்பர்” கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி மேல் நிதிமன்ற நீதியரசரான சரத் அம்பேப்பிட்டியவை அவரது வீட்டிற்கு அருகே வைத்து சுட்டுப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொட்ட நவ்பர், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
