Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

BREAKING: கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவது எப்படி? - விசேட வைத்தியர் பதில்

 



சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது குறித்து ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் மருத்துவர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார்.


குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொரோனா தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, சிறுவர்களின் இயல்பான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா?
  • மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ?
  • நடக்கும் போது அடிக்கடி உட்காருகின்றனரா ?
  • சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா?
  • சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா?
  • கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா?
  • சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ?

இத்தகைய அறிகுறிகளானது சிறுவர்களின் ஒட்சிசன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »