அமெரிக்க இராணுவம் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் ஆப்கானின் ஆட்சியை முழுவதும் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் உத்தியோகபூர்வமான சற்று முன் நுழைந்ததாக அறிவித்துள்ளனர்.
இம்மாதம் 31ம் திகதி - அதாவது இன்றுடன் அமெரிக்க இராணுவம் மொத்தமாக ஆப்கானை விட்டு வெளியேறும் என்றும், அவர்கள் வெளியேறிய பின்னர் தான் தாலிபான்கள் விமான நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஒப்பந்தப் பிரகாரம் சற்று முன் தாலிபான்கள் ஆப்கான் விமான நிலையத்திற்குள் உத்தியோகபூர்வமாக நுழைந்துள்ளனர்.
தாலிபான்களின் ஊடக பேச்சாளர் சபியுல்லாஹ் முஜாஹித், தாலிபான்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
