சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டாத 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு, அதே வயதினையுடைய தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விட 8.1 மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.
சினோபார்ம், ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் வெற்றியை ஒப்பிடுவதற்கான முதல் ஆய்வை மேற்கோள் காட்டி, அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இதனை கூறியுள்ளார்.
நான்கு தடுப்பூசிகளின் முடிவுகளும் டெல்டா மாறுபாட்டிற்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த இறப்புகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.



