Our Feeds


Tuesday, August 31, 2021

www.shortnews.lk

VIDEO: அமெரிக்க இராணுவதற்திற்கு நிகரான படையென கருதப்படும் தாலிபான்களின் “பத்ர் 313” விசேட படையணி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது

 



ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள தலிபான்கள், ‘பத்ர் 313’ எனும் தனது சிறப்புப் படைப்பிரிவினரை களமிறக்கியுள்ளனர்.


முழுமையான இராணுவ சீருடை, தலைக்கவசம், இராணுவ பூட்ஸ், நீ பாட்ஸ், தலைகவசத்தில் பொருத்தப்பட்ட கெமரா, நவீன தொடர்பாடல் சாதனங்கள், சன்கிளாஸ்கள், டெக்டிகல் ரைபிள் ரக துப்பாக்கிகள், இரவில் பார்க்கக்கூடிய சாதனங்கள் சகிதம் ‘பத்ர் 313’  (Badr 313 ) படையினர் காணப்படுகின்றனர்.

சராசரி தலிபான்ள் அங்கத்தவர்களைவிட இச்சிறப்புப் படையினருக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் காபூலின் வீதிகளில் கடந்த சில நாட்களாக இப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புனித அல் குர் ஆனில் குறிப்பிடப்படும் பத்ர் யுத்தத்தின் (Battle of Badr) நினைவாக தனது சிறப்புப் படைப்பிரிவு ‘பத்ர் 313’ என தலிபான் பெயரிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1400 வருடங்களுக்கு முன்னர் நடந்த பத்ர் யுத்தத்தில், எதிரிப்படையினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசாங்கம் வெறும் 313 போர் வீரர்களுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் இப்பெயரை தலிபான் தெரிவுசெய்துள்ளனர். (நன்றி: MetroNews)



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »