Our Feeds


Sunday, September 12, 2021

www.shortnews.lk

இஸ்ரேல் சிறையிலிருந்து அதிரடியாக தப்பிச் சென்ற 6 பலஸ்தீன முஸ்லிம்களில் 4 பேர் இதுவரை இஸ்ரேலினால் கைது

 



இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பி சென்ற 6 பாலஸ்தீன முஸ்லிம்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்தீன முஸ்லிம்கள் கழிவறையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர்.


அவர்களை கதாநாயகர்களாகப் பாலஸ்தீனத்தில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நாசரேத் நகரில் பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் பதுங்கியிருந்த 2 போராளிகளை போலீசார் கைது செய்தனர்.


அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேல் நோக்கி ராக்கெட் ஏவுகனை வீசினர். தற்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 போராளிகளை போலீசார் கைது செய்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »