விவசாயிகளிடமிருந்து 70 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வது தவறு என்றால்,
முதல் கல் என் மீது வீசப்பட வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.தனது பேஸ்புக் கணக்கில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். பொலன்னறுவையில் உள்ள அவரது அரிசி ஆலை மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொண்ட பரிசோதனை யின் பின்னர் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
டட்லி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
