ஆப்கானிஸ்தானில் ஆட்டியை மீண்டும் கைப்பற்றியுள்ள தாலிபான்களின் அரசுக்கு சீன அரசாங்கம் தனது முழு ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் சீனா அரசின் மூலம் தானியங்கள், மருந்துகள் மற்றும் மூன்று மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் ஆகியவை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்தார்.
