Our Feeds


Saturday, September 11, 2021

SHAHNI RAMEES

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலக தீர்மானம்

 


இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி, தனது இராஜினாமா கடிதத்தை நாளை மறுதினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கி ஆளுநராக பதவி ஏற்கவுள்ள நிலையிலேயே, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கின்றார்.

இதேவேளை, தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கும் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் எதிர்வரும் 14ம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »