Our Feeds


Saturday, September 11, 2021

SHAHNI RAMEES

அனுமதிப் பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருந்த நபர் கைது

 


அனுமதிப் பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று (10) பிற்பகல் ரத்கம காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம ரணபனாதெனிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 38 ஜெலட்நைட் குச்சிகள் மற்றும் 300 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று (11) காலி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »