Our Feeds


Wednesday, September 1, 2021

www.shortnews.lk

ஊரடங்கு வேளையில் நகை கொள்ளை! சிசிடிவி இருந்தும் பயனில்லை!

 



மட்டக்களப்பு சின்ன ஊறணியில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5 அரை பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் 85 அயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று (31) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த கடையில் ஒரு பகுதியில் பலசரக்கு வியாபாரமும், ஒருபகுதியில் நகை அடகு பிடிக்கும் கடை வியாபாரமும் இடம் பெற்று வந்த நிலையில் ஊரடங்கு சட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று காலையில் கடையின் உரிமையாளர் கடைக்கு சென்ற நிலையில் கடையின் பின்பகுதி கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த கொள்ளையன் முகத்தை மறைத்தபடி சூட்சகமாக கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் சகிதம் பொலிசார் சென்று தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »