தற்போது சந்தையில் சீமெந்து மூடையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களே சமீப காலமாக மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியிருந்தன. இந்நிலையில் இந்தப் பட்டியலில் தற்போது சீமெந்தும் இணைந்துள்ளதாக அறியமுடிகிறது.
இதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 950 ரூபா முதல், 1,005 ரூபா வரையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளிலும் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு தருணத்திலும் சீமெந்தின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
